கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் கூட் ரோடு வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடங்களில் கடைகளும், விளம்பர பலகைகளையும் வைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும்.
-செந்தில்நாதன், பர்கூர், கிருஷ்ணகிரி.