மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை காவேரி பகுதி சாலையில் போக்கவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மாடுகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் மாடுகள் அவ்வபோது முட்டிவிடுகின்றன. எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?