தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டில் தினமும் மீன்கள் மொத்த ஏலமும், சில்லறை விற்பனையும் நடைபெறும். இதற்காக நாகை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. இந்த லாரிகளில் பெரும்பாலானவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?