சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் பஸ்கள் பைபாஸ் சாலை வழியாகவே செல்கிறது. இந்த நிலையில் புதுவயல், கண்டனூர், கோட்டையூர் போன்ற பேரூராட்சிகளில் வசிக்கும் பயணிகள் பெரும்பாலும் காரைக்குடி வரை சென்று திருச்சி செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் நேரம் மற்றும் காசு அதிக அளவில் விரயமாகிறது.புதுவயல், கண்டனூர் போன்ற வளர்ந்து வரும் நகரப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதுவயல் முதல் கோட்டையூர் வழியாக திருச்சி மார்க்கத்திற்கு பஸ் போக்குவரத்து அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.