நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகலூர் கேட் வழியாக நாமக்கல், சேலம், ஈரோடு, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் அங்கிருந்து பஸ்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் நிற்பதற்கு ஏதுவாக ஆண்டலூர் கேட்டில் அனைத்து வழித்தடங்களிலும் நிழற் கூடங்கள் உள்ளது. ஆனால் அந்த நிழற்கூடங்கள் அருகே பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பஸ்சுக்காக நிற்க வேண்டிய பயணிகள் கடும் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது. அதை தவிர்க்க நிழற்கூடங்கள் அமைந்துள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.