பயணிகள் அவதி

Update: 2022-06-28 13:52 GMT
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் அதற்கான உரிய நடைமேடையில் நிறுத்திவைக்கப்படுவதில்லை. இதனால் வெளி மாவட்ட பயணிகள், பஸ்கள் நிற்குமிடம் தெரியாமல் அங்கும் இங்கும் அலையும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ்களை அதற்குரிய நடைமேடையில் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி