ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு பணிகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காகவும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஓசூர்- சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பஸ்களில் வரக்கூடிய மக்கள் சிறிது தூரம் இறங்கி நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் சில பஸ்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நிற்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓசூர் -சூளகிரி பகுதியில் இருந்து வரக்கூடிய அனைத்து பஸ்களும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.