போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா?

Update: 2022-08-14 11:30 GMT

செங்கோட்டை அருகே இலத்தூர் ரோட்டில் சிமெண்டு குடோன் உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் தினமும் கேரளாவுக்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள குறுகிய சாலை வழியாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து புளியரை சோதனை சாவடி வரை நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை செங்கோட்டைக்குள் வராமல் இலத்தூர் வழியாக கேரளா செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்