அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, செங்குன்றம் போன்ற பகுதிகளுக்கு இரவு 9.30 மணிக்கு மேல் பஸ்கள் இயங்குவதில்லை. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மற்ற பகுதிகளுக்கு இரவு நேர பஸ்கள் இயக்கப்படுவது போல் மேற்கூறிய பகுதிகளுக்கும் இரவு நேர பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?