டவுன் பஸ் வரவேண்டும்

Update: 2022-08-11 10:32 GMT


கோபி அருகே உள்ள கடத்தூரில் இருந்து சுண்டக்காம்பாைளயம் வழியாக புஞ்சைபுளியம்பட்டிக்கு 23-ம் எண் கொண்ட டவுன் பஸ் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாதமாக ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுவதில்லை. இதனால் ஞாயிறன்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் 23-ம் எண் டவுன் பஸ்சை ஞாயிறுக்கிழமையும் இயக்கவேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி