வடசென்னை பகுதியான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் இருந்து டைடல் பார்க், பெருங்குடி, சிறுசேரிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் 2 அல்லது 3 பஸ்கள் மாறி தான் செல்லவேண்டியுள்ளது. எனவே வடசென்னையில் இருந்து பெருங்குடி மற்றும் சிறுசேரிக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.