ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொக்கனாரேந்தல் கிராமத்தில் 400 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.