பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கனரக வாகனங்களில் ராட்சத எந்திரங்கள் ஏற்றி வரப்படுகின்றன. இந்த வாகனங்கள் சாலையோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், கிருஷ்ணகிரி.