கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பல்லடம் செல்ல அவினாசி வழியாக திருப்பூருக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகளுக்கு கால விரயம், வீண் பயண செலவு ஏற்படுகிறது. எனவே அன்னூர், சோமனூர், காரணம்பேட்டை வழியாக பல்லடம் செல்ல நேரடி அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் முன்வருவார்களா?