அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்

Update: 2022-08-08 10:39 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டுவருகிறது. இந்த பஸ் அடிக்கடி பழுதாகி சாலையில் நின்றுவிடுகிறது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பழுது காரணமாக பஸ் முறையாக இயக்கப்படுவதும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ் பழுதாகி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?






மேலும் செய்திகள்