மடிப்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து பாரி முனைக்கு சென்று வர சாதாரண வகை பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் சாதாரண வகை பஸ்கள் குறைக்கப்பட்டு டீலக்ஸ் வகை பஸ்களே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் சாதாரண வகை பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.