திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அரசுப்பணிமனையிலிருந்து இயக்கப்படும் பஸ் அதிகாலை 5 மணிக்கும் இரவு 7 மணிக்கும், வைரிசெட்டிப்பாளையம், ஏரிக்காடு, பசலக்கோம்பை வழியாக பெரியசாமி கோவிலுக்கு, பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளி மாணவர்களுக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பயன்படும் வகையில் நேரத்தை மாற்றியமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.