சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பி 18 தடம் எண் கொண்ட பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் சேவை, கொரோனா காலத்திற்கு பின் வெகுவாக குறைக்கப்பட்டு 1.30 மணி நேரத்துக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து சீரான இடைவெளியில் மேற்கூறிய பஸ்சை இயக்குவதுடன், கொருக்குபேட்டையிலிருந்து அடையாறு வரை இயக்கப்பட்டு வந்த 48சி, 32பி, தடம் எண்களை கொண்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.