கரூர் மாவட்டம், வெள்ளியணை பஸ் நிறுத்த பகுதியானது சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், கரூருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோரும் காத்திருந்து பஸ் ஏறி செல்லக்கூடிய ஒரு பகுதியாகும். அகலப்படுத்தப்பட்ட சாலையில் இந்த பஸ் நிறுத்த பகுதியில் பாளையம், திண்டுக்கல், காணியாளம்பட்டி, தரகம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்ப்புறத்தில் கரூர் தாந்தோன்றிமலை செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை போன்றவற்றிலிருந்து தங்களை காத்து கொள்ளவும், வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் அமர்ந்திருந்து பஸ் ஏறிச் செல்ல முடியாத நிலையில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.