கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஓசூர் பகுதியில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செல்கின்றனர். ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.விஜேந்திரன், சிவசக்திநகர், ஓசூர்.