அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-03 12:44 GMT
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையையொட்டி ரங்கா நகருக்கு செல்லும் சாலை உள்ளது. உழவர் சந்தை அருகே இந்த சாலையின் இரு புறங்களிலும் காலை நேரத்தில் கடைக்கு வருபவர்கள் அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த வழியாக வாகனங்களில் சென்றுவர கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பாலா, சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்