கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-08-02 12:40 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காரவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம் வழியாக சேந்தமங்கலத்திற்கு மாலை பள்ளி விடும் நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவதால்  குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் ஆபத்தான பயணம்‌ செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி நேரங்களில் அந்த வழியாக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்