சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் இருக்கும் சிக்னல் சரிவர இயங்குவதில்லை. இதனால் அந்த பகுதியை கடக்கும்போது சாலைவாசிகளுக்கு குழப்பம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் சிக்னல் விளக்குகள் சிவப்பு நிறத்தில் உள்ளதா? இல்லை பச்சை நிறத்தில் உள்ளதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து சிக்னலை சரி செய்து தர வேண்டும்.