நிறுத்தப்பட்ட பஸ்கள்

Update: 2022-08-01 17:39 GMT

சேலம் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூருக்கு காலை 7.15 மணி முதல் 9 மணி வரை 3 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் 3 பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், சேலம்.

மேலும் செய்திகள்