ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2026-01-18 18:07 GMT
ரெயிலுக்காக கடலூர் துறைமுகம் சுத்துக்குளம் ரெயில்வே கேட் மூடப்படும் போது எல்லாம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்