சுரங்கப்பாதை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-01 17:30 GMT
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ரெயில்வே மேம்பாலத்தின் மேல்புறம் சுரங்கபாதை உள்ளது. இதன் வழியே பெரியார் நகர், கணபதி நகர், கந்தன் நகர், தாத்தாச்சாரியார் கார்டன் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும், பொதுமக்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் மற்றும் நடந்தும் திருவானைக்காவல் சென்று வருவதற்கு பிரதான வழியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவ்வழியில் மழைக்காலங்கள் வரும்போதெல்லாம் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதுடன் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரியாத காரணத்தினால் பாதுகாப்பின்மையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன் நிரந்தர தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் செய்திகள்