பஸ் வசதி வேண்டும்

Update: 2022-08-01 16:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சூலாமலை ஊராட்சி மேல்கொட்டாய் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்வோர், பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி செல்ல வேண்டுமென்றால் அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரப்பம் பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். எனவே இப்பகுதி மக்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-ராமு, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்