சென்னை ஆழ்வார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்துள்ளது. சில நேரங்களில் எரியும் விளக்குகள், சில நேரங்களில் எரிவதில்லை. மேலும் சிவப்பு விளக்கும் பச்சை விளக்கும் மாறி மாறி எரிவதால், பயணிகள் குழம்புவதும், அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே பழுதடைந்த போக்குவரத்து விளக்குகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.