மினி பஸ் சேவை திடீர் நிறுத்தம்

Update: 2022-07-31 16:41 GMT
தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து என்.ஆர்.டி. நகர், சமதர்மபுரம், கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட்ரோடு பகுதிகளுக்கு மினி பஸ் சேவை இயக்கப்பட்டது. சமீபகாலமாக இந்த மினிபஸ் கே.ஆர்.ஆர். நகர் பகுதிக்கு வருவதில்லை. இதனால் இந்த பஸ் சேவையை நம்பி இருந்த மக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த மினி பஸ் மீண்டும் கே.ஆர்.ஆர். நகர் பகுதிக்கு வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்