சேலம் பொன்னாம்பேட்டை, அம்மாபேட்டை பெரியார் வளைவு, சின்னகடை வீதி, மிலிடரி ரோடு, குமரகிரி பைபாஸ் ஆகிய சாலைகளில் பஸ்கள் உள்பட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அந்த சாலைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.