தேனி நகரில் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். டிரைவரின் இருக்கையில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற விதிமீறல் ஆட்டோக்களில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.