சேலம் மாவட்டம் தாரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் மாநகர பஸ்கள் சுமார் 6 மாதங்களாக சரியான நேரத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படுவது கிடையாது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும்.
-சாமுவேல், தாரமங்கலம், சேலம்.