நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அலுவலக நுழைவாயில் கேட் திறந்தே இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த ஊராட்சி மன்ற அலுவலகம் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-சுதர்சன், வேட்டாம்பாடி, நாமக்கல்.