போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-25 14:52 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நான்கு சாலை சந்திப்பு மற்றும் தேரடி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் காலை முதல் இரவு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் இங்கு போக்குவரத்தை சரி செய்வதற்கு போலீசார் இல்லாததால் இந்த பகுதியை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து போக்குவரத்து போலீசாரை இந்த பகுதியில் பணியில் அமர்த்தி வாகன நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்