பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-09-10 14:07 GMT

நாமக்கல் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்களில் கொண்டுவரப்படும் பொருட்களை ஏற்றி செல்வதற்காக லாரிகள் அங்கு கொண்டு வரப்படுகிறது. அந்த லாரிகள் நாமக்கல்-சேந்தமங்கலம் பிரதான சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் அந்த வழியே செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மோகன், நாமக்கல்.

மேலும் செய்திகள்