கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மைய பகுதியான ரவுண்டானா 4 ரோடு வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவசர வேலைக்காக செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சதீஷ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.