நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாட்டில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் சுற்றுப்புற சூழல் மாசுபட்டு வருகிறது. எனவே கோவிலுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், செம்மேடு, நாமக்கல்.