மீண்டும் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-08-27 16:31 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து பாம்பாறு அணை, மிட்டப்பள்ளி வழியாக கொட்டுக்காரன்பட்டி கிராமத்திற்கு காலை, மதியம், இரவு என 3 முறை நகரப் பஸ் சென்று வந்தது. கடந்த ஒரு ஆண்டாக இரவு நேரத்தில் இந்த கிராமப்புறங்களுக்கு செல்லும் நகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கிராமப்புற பெண்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட நகர பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சாமிநாதன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்