தூத்துக்குடி அருகே முள்ளக்காடு, சவேரியார்புரம், ஸ்பிக்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரையிலும் ஏராளமான மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு புறப்பட்டு செல்கின்றனர். அந்த நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அனைவரும் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே போதுமான கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?