சூளகிரியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் பணி நிமித்தமாக ஓசூருக்கும், பெங்களூருவுக்கும், கிருஷ்ணகிரி நகருக்கும் செல்கிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஷ்ணகிரி, ஓசூர் பஸ் நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டங்கள் இருப்பதால் சூளகிரி பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலானவை வருவதில்லை. ஆகவே சூளகிரி பகுதியில் இருந்து ஓசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி நகரங்களுக்கு விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், அனைத்து பஸ்களும் சூளகிரி பஸ் நிலையம் வந்து செல்லவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மஞ்சுநாத், சூளகிரி.