நாமக்கல் மாவட்டம் புதன்சந்தைக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சந்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கோபி, புதன்சந்தை, நாமக்கல்.