நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கோம்பை காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு வெண்ணந்தூர், ராசிபுரம், சேலம், நாமக்கல் செல்ல முறையான பஸ் வசதி இல்லை. இதனால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுரேஷ், வெண்ணந்தூர்.