விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். திருவிழா காலமாக இருப்பதால் இப்பகுதிகளுக்கு இடையே அதிகமானோர் பயணிக்கின்றனர். எனவே பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை அதிகபடுத்த நடவடிக்கை எடுப்பார்களா?