அரியலூர் நகரில் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு சரியான பஸ் வசதி இல்லாததாலும், ஆட்டோவில் கட்டணங்கள் அதிகமாக கேட்பதாலும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி வந்து இறக்கி விடுவது அதிகரித்துள்ளது. விவசாய வேலைகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு ஆண்களையும், பெண்களையும் கிராமப் பகுதியில் இருந்து அழைத்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தால் அந்த வழியை தவிர்த்து வேறு வழியில் பயணிகளை ஏற்றி சென்று விடுகின்றனர். சரக்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிர் பலியும் காயங்களும் ஏற்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.