தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அன்னம்மாள் மகளிர் கல்லூரி அருகில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சாலை விரிவாக்க பணிகளுக்காக இடித்து அகற்றினர். பின்னர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும், அங்கு மீண்டும் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.