மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ெரயில் ரோட்டின் மேல் தரைவழி மேம்பாலம் உள்ளது. இதன் இரு புறங்களிலும் மணல் துகள்கள் அதிக அளவில் குவிந்து உள்ளதால் திடீரென காற்றடிக்கும் பொழுது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மணல் தூள் கண்களில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிபடுவதுடன் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலை ஓரங்களில் உள்ள மணல் துகள்கள் மற்றும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
-பழனி, மோகனூர்.