நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை சுற்றி பார்க்க செல்லும் இளைஞர்கள் பலர் சேந்தமங்கலம் மெயின் ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சற்று அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே வார இறுதி நாட்களில் சுற்றுலாவாக வரும் இளைஞர்கள் வாகனங்களை சேந்தமங்கலத்திற்கு முன்னதாகவே மாற்று வழியில் திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ் சூர்யா, சேந்தமங்கலம், நாமக்கல்.