பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-07-19 12:37 GMT

அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 4 மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் நலன்கருதி அந்தியூர், பவானி சென்றுவர பட்லூர் நால்ரோடு, குட்டமேடு, புகையிலைரெட்டியூர், மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்