பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆய்வுக்காக நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாகன ஆய்வுகள் மேற்கொள்வதை தவிர்த்து மாற்று இடத்தில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணி, பரமத்திவேலூர்.