கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரியில் தொன்னையன் கொட்டாயில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகருக்குள் வருபவர்கள் சாலையில் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலை கடந்து வருகின்றனர். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு அந்த பகுதியில் தடுப்புகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜா, கிருஷ்ணகிரி.